பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, பேசுகையில்,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் அனைத்து வீடுகளுக்கும் செயல்படக்கூடிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகளுக்கு, ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்து, பணிகள் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பணிகளை விரைவில் துவங்கி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமென கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.முதல்வரின் சூரிய மின்சக்தி பசுமை வீடுகள் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை கோரும் அனைவருக்கும் தவறாமல் வேலை வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.கோவிட் 19 வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகள், அம்மா இருசக்கர வாகன திட்டம், சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம், சாலை பணிகள் மற்றும் இதர திட்ட பணிகளின் முன்னேற்றத்தை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜா உட்பட மண்டல அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள், உதவி பொறியாளர்கள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X