சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கொடிக்கம்பம் அகற்றம்: போலீசாருடன் வாக்குவாதம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில் அனுமதியில்லாமல் நட முயன்ற பா.ஜ.,கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் உள்ளிட்ட பலஇடங்களில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ.,சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சி கொடியை மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஏற்றுவதாக இருந்தது.இதற்காக திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பா.ஜ.,சார்பில், கொடிக்கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.நேற்று பிற்பகல் 12.30 மணியளவில், கொடிக்கம்பத்தின் அடிப்பாகம் நட முயற்சித்த போது, பாதுகாப்பிற்காக வந்திருந்த டவுன் சப்இன்ஸ்பெக்டர் தமிழ்மணி உள்ளிட்ட போலீசார், நகர பா.ஜ.,தலைவர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம்,முறைப்படி வருவாய்த்துறை அனுமதி பெற்று கொடிக்கம்பம் நடுமாறு கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.இதன் பிறகு, பா.ஜ.,வினர் வருவாய்த்துறையினரிடம் அனுமதி வாங்குவதற்காக சென்றனர். இந்த சமயத்தில் நடுவதற்காக தயாராக இருந்த கொடிக்கம்பம் போலீசார் ஏற்பாட்டின் பேரில், அங்கிருந்து அகற்றி, ஆட்டோவில் ஏற்றப்பட்டது. போலீசாரின் எதிர்ப்பு காரணமாக, தீர்த்தக்குளம் பகுதியில் பா.ஜ.,வின் கட்சி கொடிக்கம்பத்தை நட்டு, கட்சி கொடியை ஏற்ற முடியாமல் போனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X