சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணலுார்பேட்டையில் மதுபான வழக்கில் 3 பேர் கைது

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருக்கோவிலூர்: மணலூர்பேட்டை பகுதியில் நடந்த சாராய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மணலூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அரசு மதுபான பாட்டில்களை வாங்கி பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 60 லிட்டர் கள்ளச்சாராயத்தை பதுக்கி விற்பனை செய்துகொண்டிருந்த காமராஜ், 50; கையும் களவுமாக பிடிபட்டார்.அதேபோல் மணலூர்பேட்டையில் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த தனபால் மகன் சண்முகம், 47; சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் செந்தில்குமார், 41; ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.இதுகுறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X