பொது செய்தி

தமிழ்நாடு

பெரியதச்சூரில் பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி

Added : செப் 16, 2020
Share
Advertisement

மயிலம்: மயிலம் ஒன்றியம் பெரியதச்சூர் ஊராட்சியில் தினமலர் பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது.பெரியதச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகாஷ் மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் இதழை வழங்கி பேசுகையில் தினமலர் நாளிதழ் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் வெளியீட்டு வருகிறது.இந்த இதழில் மாணவர்களுக்கு தேவையான அறிவியல், கணிதம், பொது அறிவு போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகள் வந்து வெளிவருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கிறது. மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைவதால் மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. நீட் உள்ளிட்ட போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பட்டம் இதழ் செய்திகள் பெரும் உதவியாக உள்ளது.கடந்த கல்வி ஆண்டு பட்டம் இதழ் சார்பில் நம் ஊர் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு சான்றிதழும் கேடயமும் தினமலர் சார்பில் வழங்கப்பட்டது.இது நம்முடைய பள்ளிக்கு மேலும் பெருமை சேர்க்கிறது என்றார். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் காரணமாக பள்ளிகள் செயல்படவில்லை. எனவே நமது கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்குபட்டம் இதழ் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தன்னார்வலர் ஆசிரியர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X