பொது செய்தி

இந்தியா

ரியா விவகாரம்: ஊடகங்களுக்கு எதிராக பாலிவுட் பகிரங்க கடிதம்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
மும்பை : போதை பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரியா சக்ரவர்த்தியை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுவதை நிறுத்தக் கோரி பாலிவுட் கலைஞர்கள் ஊடகங்களுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக அவரது தோழி ரியா சக்ரவர்த்தி சகோதரர் ஷோவிக் உள்ளிட்ட 18 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்
Rhea Chakraborty, Bollywood, letter, media, Rhea, Sushant Singh Rajput, Sushant Death Case

மும்பை : போதை பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரியா சக்ரவர்த்தியை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுவதை நிறுத்தக் கோரி பாலிவுட் கலைஞர்கள் ஊடகங்களுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக அவரது தோழி ரியா சக்ரவர்த்தி சகோதரர் ஷோவிக் உள்ளிட்ட 18 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்தி நடிகர் சோனம் கபூர், இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், மீரா நாயர் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் 2500 பேர் ஊடகங்களுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.

'செய்தியை வேட்டையாடுங்கள் ; பெண்களை அல்ல' என்ற தலைப்பில் வெளியான கடிதத்தின் விபரம்: பத்திரிகை தர்மம், மனிதாபிமானம், கண்ணியம் ஆகியவற்றை காற்றில் பறக்க விட்டு ஒரு பெண் என்றும் பாராமல் ரியாவை காயப்படுத்துகிறீர்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து உங்கள் கேமரா கண்களால் ரியாவின் தனிநபர் உரிமையை பறிக்கிறீர்கள். இதேபோல சல்மான் கான், சஞ்சய் தத் விவகாரங்களில் நீங்கள் செயல்பட்டீர்களா? எவ்வளவு கரிசனத்துடன் செய்தி வெளியிட்டீர்கள்.


latest tamil news


ஏன் ரியாவையும் அவரது குடும்பத்தையும் கேவலமாக சித்தரித்து வலைதளத்தில் செய்தி வெளியிடுகிறீர்கள். கொரோனாவால் நாடு சந்தித்துள்ள சுகாதார பிரச்னை, மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு போன்ற பல விஷயங்கள் இருக்க மலிவான விளம்பரத்திற்காக ரியாவை தாக்குவது சரியல்ல. ரியா மீதான சூன்யவேட்டையை நிறுத்தி செய்திக்காக வேட்டையாடுங்கள். உங்கள் பணியை சரியான முறையில் பொறுப்போடு செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-202015:25:36 IST Report Abuse
babu இதில் ஆண், பெண் என்பது முக்கியமல்ல. குற்றவாளிகளா? ஒழுக்கமுள்ளவர்களா? கழுத்தறுத்தவர்களா? கற்பழித்தவர்களா? என்பது தான் முக்கியம்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-செப்-202014:21:15 IST Report Abuse
Sridhar கத்தட்டும். கத்த கத்தத்தானே தெரியும் எவனெவனெல்லாம் போதை கும்பலில் இருக்கிறான் என்று.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
16-செப்-202012:59:58 IST Report Abuse
Suppan ஊடகங்கள் எல்லை மீறிப் போகின்றன என்ற வாதம் சரிதான். மஹா அரசு இதை மறைக்கப் பார்த்தது. இதை போதை மாபியா மட்டுமல்ல, தாவூத் மாபியா, படவுலக மாபியா, அரசியல் மாபியா எல்லோரும் உடந்தை என்று வெளிவந்தது. இது ஊடகங்களினால்தான் வெளிவந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X