சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்குகள் மோதல் வாலிபர் பலி

Added : செப் 16, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பைக் விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகன் இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் கோகுலகிருஷ்ணன்,26, பி.இ., பட்டதாரி; இவர் டி.எண்.15 வி.7854 என்ற பதிவெண் கொண்ட டிவிஎஸ் விக்டர் பைக்கில், கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் நோக்கி நேற்று இரவு 9:00 மணியளவில் சென்றுள்ளார்.கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பை திடல் ஆற்று பாலத்தின் அருகே சென்ற போது, எதிரே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த டி.எண்32 ஏஇஸட்9551 என்ற பதிவெண் கொண்ட யமாகா பைக் கோகுலகிருஷ்ணன் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் படுகாயமடைந்த கோகுலகிருஷ்ணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே கோகுலகிருஷ்ணன் இறந்தார். இவரது தந்தை சுப்ரமணியன் சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X