பொது செய்தி

தமிழ்நாடு

இளநிலை உதவியாளர் பணி17 பேருக்கு நாளை கலந்தாய்வு

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வான கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 17 பேர், இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா செய்திக்குறிப்பு: 2018-19 மற்றும் 2019-20 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 644 இளநிலை உதவியாளர்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்வான 17 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், இணையதளம் வாயிலாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இதில், பட்டியல் வரிசை எண் 1-330 வரை நாளை 17 ம் தேதி (வியாழன் கிழமை), 331 - 644 வரை 18 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்களுடைய கல்வி தகுதி சான்றுகள், மருத்துவரின் உடற்கூறு தகுதி மற்றும் ஜாதிச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களினை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
16-செப்-202006:20:08 IST Report Abuse
Thanu Srinivasan இது என்ன கூத்து/அயோக்கியதனம் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் ஆண்டிற்கொரு முறை த.நா.பொ.தேர்வாணையம் தேர்வு நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு நியமன ஆணை அஞ்சல் வழி அனுப்படும். மருத்துவ சான்றிதழை கொடுத்து அவரவர்கள் வேலையில் சேருவார்கள். இதில் கலந்தாய்வுக்கு என்ன வசியம். ஊழல் பண்ணுதுதானே நோக்கம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல்பண்ண புதியது புதியதாக வழிமுறைகளை உருவாக்குகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X