சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்தவர் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பேட்டையில் மயானத்திற்கு இறுதி ஊர்வலம் செல்ல தனிநபர் எதிர்ப்பு தெரிவித்ததால் இஸ்லாமியர்கள் சாலைமறியலில்ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டையில் இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட மயானம் அப்பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தம் என ஏற்கனவே பிரச்னை இருந்து வந்தது. நேற்று இறந்த இஸ்லாமியர் ஒருவரை அடக்கம் செய்ய எடுத்து செல்ல பள்ளம் தோண்டும்போது தனிநபர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் புதுப்பேட்டை பேருந்து நிலையத்தில் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.பின்னர் இறுதி ஊர்வலம் நடந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது, இந்த சாலை மறியலால் நேற்று மாலை 5 :00 மணி முதல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X