சென்னை : 'மக்களை கை கழுவச் சொன்ன அரசு இப்போது மக்களையே கை கழுவி விட்டது ஏன்' என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் அறிக்கை: 'நீட்' நுழைவு தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை வழிக்கு கொண்டு வராமல் மாணவர்களுக்கு முறையான பயிற்சி தன்னம்பிக்கை தரத் தவறிய இந்த அரசால் இன்னும் எத்தனை மரணங்களை தமிழகம் தாங்கும்.நிவாரணம் வாயிலாக பிரச்னையை மூடி மறைக்க நினைக்கின்றனர்.
விவசாயிகளுக்கான உதவித் தொகையை உண்மையான பயனாளிகளுக்கு சேர்க்க தவறியதன் வாயிலாக தன் ஊழல் முகத்தை கொரோனா காலத்தில் கூட அரசு காட்டுவது முறையா. 'ஆன்லைன்' கல்வி முறையில் எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்தாமல் அலட்சியப் போக்கு காட்டியுள்ளது. மக்களை கை கழுவச் சொன்ன அரசு இப்போது மக்களையே கை கழுவி விட்டது.

கொரோனா நெருக்கடியில் பொருளாதார பாதிப்புக்கு இடையே எட்டு வழிச்சாலைக்கு இத்தனை அவசரம் காட்டுவது ஏன்; மீனவர்கள் நலனில் இந்த அரசு எப்போது கவனம் செலுத்தும்; வேலைவாய்ப்புக்கு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. மாநில அரசு அழுத்தம் தராமல் மத்திய அரசிடம் நிதி பெறுவது சாத்தியம் இல்லை.
அம்மா அரசு மதுக்கடைகளை எப்போது மூடும்; பருவ மழை முன்னெச்சரிக்கையாக என்ன செய்யப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்னை குறித்து விவாதிக்காமல் மூன்றே நாளில் கண்துடைப்பாக சட்டசபை கூட்டத்தை நடத்தி முடிப்பது ஏன்; தமிழக அரசு பதில் தருமா? இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE