பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு 'கட்-ஆப்' மதிப்பெண் இந்தாண்டு எப்படி இருக்கும்?

Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
நீட்தேர்வு, கட்ஆப், மதிப்பெண்,  NEET exam,medical entrance test,நீட்

கோவை: நடப்பாண்டுக்கான 'நீட்' தேர்வு 'கட்-ஆப்' மதிப்பெண் குறித்து தேர்வு எழுதிய மாணவர்களிடம்எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ பட்ட படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு கடந்த, 13ம் தேதிநடந்தது. நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண்களை தேசிய தேர்வு ஆணையம் வெளியிட உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் அடிப்படை மதிப்பெண் தான் 'கட்-ஆப்' என்றுகருதப்படுகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், 50 சதவீதமும், எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, 40 சதவீதமும் உள்ளன.

வெளிநாட்டில் மருத்துவ படிப்பபை தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும்.நீட் தேர்வு-2020 'கட்-ஆப்' மதிப்பெண் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை, மொத்தகாலியிடங்கள், வினாத்தாளின் கடின நிலை, இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக் கப்படும்.


latest tamil news


தேசிய தேர்வு ஆணைய அறிவிப்பின்படி, நீட் கட்-ஆப் சதவீதம் என்பது பிற தேர்வர்களை ஒப்பிடும்போது, ஒரு குறிப்பிட்ட தேர்வரின் செயல்திறன் விகிதம் குறித்த ஒப்பீட்டை அளிக்கிறது. அதேநேரம் 'கட்-ஆப்' மதிப்பெண் என்பது அந்த ஒரு குறிப்பிட்ட தேர்வர் மொத்த மதிப்பெண்களில் பெற்றஅளவை வழங்குகிறது. கட்-ஆப் சதவீதமும், மதிப்பெண்களும் இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு வேறுபடுகின்றன.கடந்தாண்டு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 701-134, எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி.,பிரிவினருக்கு, 133-107 கட்-ஆப் மதிப்பெண்களாக இருந்தது.

இந்தாண்டு முதல் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சத வீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasamy - chennai,இந்தியா
16-செப்-202014:41:51 IST Report Abuse
Ramasamy இங்கு ஒன்றை பார்க்க வேண்டும் . இன்ஜினியரிங் காலேஜ் இல் அரசியல் சப்போர்ட் உடன் உல்லன்ன அனால் படிப்பின் தரம் தாழ்ந்து விட்டது அண்ட் வேலை இல்லை. இதை தர்விற்க முழுவதும் மெரிட் அடிப்படையில் தேர்வு அகா வேண்டும். முடியாதவர்களுக்கு அரசு பள்ளிகளில் அதற்கேற்ப பாட திட்டத்தை மாற்ற வேண்டும். ஈடா ஒதுக்கீடு என்பது அட்மிஷன் முடிந்தபின் சலுகைகளாக மாற வேண்டும். எண்ட்ரன்ஸ் அண்ட் அட்மிஷன் மெரிட் அடிபடை மட்டும்தான். .
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
16-செப்-202013:03:31 IST Report Abuse
Visu Iyer அப்படியாவது மருத்துவ படிப்பு தேவையா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் போல.. இனி என்ன மருத்துவ சேவை செய்ய பட்டம் பெற்ற மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது போல தான் தோன்றுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X