பொது செய்தி

தமிழ்நாடு

சுத்தமாயிருக்கட்டும் குடல்... சுகமாயிருக்கும் உடல்!

Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 சுத்தமாயிருக்கட்டும் குடல்... சுகமாயிருக்கும் உடல்!

கொரோனாவுக்கு சீக்கிரமே மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடலாம். ஆனால் இன்னொரு தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டுமென்று எச்சரிக்கை மணி அடிக்கிறது உலக சுகாதார அமைப்பு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதுதான் நிரந்தரமான தீர்வு.




அதற்கு உதவுகிறது யோகா மற்றும் இயற்கை மருத்துவம்.இது வெறும் மருத்துவம் மாத்திரமல்ல; வாழ்க்கை முறை. கொரோனா நோயாளிகளுக்கு வைட்டமின் - டி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதை வேறு எந்த மருந்திலும் தந்துவிட முடியாது. தினமும், ஒரு முறை, 10 - 15 நிமிடங்கள் சூரியஒளி நம் உடல் மீது படும் வகையில் சூரிய குளியல் எடுத்தால், வைட்டமின் - டி கிடைக்கும்.குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென்பதையும் இயற்கை மருத்துவம் வலியுறுத்துகிறது.



ஏனெனில் கொரோனா உள்ளிட்ட தொற்றுகளை எதிர்கொள்வதற்கு மட்டுமின்றி, உடலுக்குள் எவ்விதமான நோயும் தாக்காமல் தடுப்பதில் குடலின் பங்கு முக்கியமானது. ஆரோக்கியமான குடல் இருந்தால், அந்த உடல் ஆரோக்கியமாகத்தான் இருக்கும்.செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவும் லட்சக் கணக்கான நல்ல நுண்ணுயிரிகள் குடலில் உள்ளன. இயற்கையான, பதப்படுத்தப்படாத மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு குடலை பராமரிக்க உதவுகிறது.அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் குடலை தொந்தரவு செய்கின்றன. இது செரிமானத்தை மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு செயல்பாட்டையும் தடுக்கிறது.



பருவகால பழங்கள் அல்லது உங்களுக்கு விருப்பமான வேகவைத்த காய்கறிகளுடன் வாரத்திற்கு ஒரு நாள் உணவை உட்கொள்வது அற்புதமான பலன் அளிக்கும். ஒரு நாள் உண்ணாவிரதம் அதை விட நலம் தரும்.



நோயில் வீழ்வதும் தடுப்பதும் உங்கள் கையில் இல்லை...வாயில் இருக்கிறது.




மூச்சுப்பயிற்சி பெஸ்ட்!


கொரோனாவுக்கு நாங்கள் வைத்தியம் பார்ப்பதில்லை. கொரோனா அறிகுறியுடன் எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களை முதலில் டெஸ்ட் எடுக்கச் சொல்லி அனுப்பி விடுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி அதிரிக்க இயற்கை முறையில் வீட்டில் மருந்து தயாரித்து சாப்பிடும் ஆலோசனைகளைக் கூறுகிறோம். குறிப்பாக மூச்சுப்பயிற்சி, யோகா செய்ய அறிவுறுத்துகிறோம். அது நல்ல விளைவையும் தருகிறது. உரிய மருந்துகளுடன் இயற்கை முறை சிகிச்சையைச் செய்யும்போது விரைவில் குணம் கிடைக்கிறது!


-எமி,



நேச்சுரோபதி மருத்துவர்,



தொடர்பு எண்: 7667660105,


இமெயில்: dremibnys@gmail.com




வாசம் மீளும்... சுவாசம் நீளும்!

இயற்கை மருத்துவ முறையில் செய்யப்படும் ஜல நெட்டி என்பது மேல் சுவாசக் குழாயை சுத்தப்படுத்த ஒரு வரம் என்று குறிப்பிடப்படுகிறது. யோகாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு சுத்திகரிப்பு நுட்பங்களில் இது முக்கியமான ஒன்றாகும்.இந்த எளிய, பாதுகாப்பான நடைமுறையில் சூடான உப்பு நீரை ஒரு நாசிக்குள் செலுத்தி, மற்ற நாசியில் நெட்டி கலன் எனும் சிறப்பு சாதனத்தைப் பயன்படுத்தி வெளியேற்றுவது ஆகும். இது மேல் சுவாசக் குழாயில் அடைபட்ட சளியை நீக்க உதவுகிறது. கொரோனா தொற்றின்போது தற்காலிகமாக இழந்த வாசனையை மீட்டெடுப்பதற்கும் சுவாசம் எளிதாவதற்கும் இந்த சிகிச்சை முறை பெரிதும் பலன் தருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202021:35:03 IST Report Abuse
oce சீனாக்காரன் இன்னொரு வைரஸை பரப்புவான்.அதற்கும் மருந்து கண்டு பிடிக்க வேண்டும். மனிதரின் பிழைப்பே இனி நாறி விடும்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202021:30:33 IST Report Abuse
oce உடலும் குடலும் சுத்தமாக இருந்தால் மூளையும் விவரமாக வேலை செய்யும். பிறருக்கு எந்த தீங்கும் செய்யமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X