தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பிற மாநிலங்களுக்கு போயிருக்க மாட்டார்களோ?

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (24) | |
Advertisement
அரசியல் செய்வதற்கு வேறு காரணம் கிடைக்காததால், எதிர்க்கட்சிகள், 'நீட்' தேர்வை கையில் எடுத்துள்ளன. நீட் தேர்வை இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்டுள்ளது. மாணவர்கள் தற்கொலைக்கு நீட் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது - நயினார் நாகேந்திரன்.'தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், பிற மாநிலங்கள் பக்கம் போயிருக்க மாட்டார்களோ என்ற சந்தேகத்தை, அவர்களின் நீட்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பிற மாநிலங்களுக்கு போயிருக்க மாட்டார்களோ?

அரசியல் செய்வதற்கு வேறு காரணம் கிடைக்காததால், எதிர்க்கட்சிகள், 'நீட்' தேர்வை கையில் எடுத்துள்ளன. நீட் தேர்வை இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்டுள்ளது. மாணவர்கள் தற்கொலைக்கு நீட் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது - நயினார் நாகேந்திரன்.


'தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், பிற மாநிலங்கள் பக்கம் போயிருக்க மாட்டார்களோ என்ற சந்தேகத்தை, அவர்களின் நீட் எதிர்ப்பு நிலைப்பாடு ஏற்படுத்துகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.கல்வி உரிமை பறிபோகும் போது, கலைஞர்கள், படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே, மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து, தமிழக திரை நட்சத்திரங்கள் குரல் கொடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்


'படைப்பாளிகள், கலைஞர்களே, கொரோனாவால், அலறிக் கொண்டிருக்கும் போது, எங்கே உரிமைக்குரல் எழுப்பப் போகின்றனர்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.அரியர் மாணவர்களுக்கு, தேர்ச்சி அளிக்கக் கூடாது என, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு பொறியியல் கூறியுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பில் எந்த விதமான விதிமீறலும் இல்லை. இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்ச்சியும் வழங்கவில்லை. அப்படியிருக்கும் போது, எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் - த.மா.கா., தலைவர் வாசன்.


latest tamil news

'எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், நீங்கள் ஒருவர் தான், நியாயமாக பேசுகிறீர்கள்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில், தி.மு.க., போன்ற திராவிட கட்சிகள், மாணவர்களுக்கு தைரியம் வழங்க வேண்டுமே தவிர, அதை பொய் பிரசாரம் செய்து அரசியலாக்கக்கூடாது. தேர்வு என்ற பய அழுத்தத்தை, தி.மு.க., கொடுத்து வருகிறது - நடிகை காயத்ரி ரகுராம்.


'இந்த கருத்தை, பா.ஜ., தவிர்த்து, பிற தலைவர்கள் வலியுறுத்துவதே இல்லை...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., கலை மற்றும் கலாசார பிரிவு மாநில தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி.மத்திய, பா.ஜ., அரசுடன், அ.தி.மு.க., அரசு நெருங்கி இருந்தாலும், 'நீட்' தேர்வை தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில் ஆட்சிக்கு வரப்போகும், தி.மு.க., அரசு, நீட் தேர்வை தடுக்க முயற்சிகளை எடுக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து, எம்.பி.,க்களும், 'நீட்' தேர்வுக்கு எதிராக உள்ளனர். எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு, 'நீட்' தேர்வுக்கு எதிராக
குரல் கொடுப்போம் - எம்.பி., கார்த்தி சிதம்பரம்.


'தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தனர்...' என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், காங்கிரஸ், எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
16-செப்-202019:26:35 IST Report Abuse
K. V. Ramani Rockfort நீட் எதிர்ப்பு நிலைப்பாடு : தமிழக திராவிடாஸ், பிற மாநிலங்கள் பக்கம் போயிருக்க மாட்டார்களோ சரியாகத்தான் சொல்லியுள்ளார் BJP மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்
Rate this:
Cancel
SATHIK BASHA - INDIA,இந்தியா
16-செப்-202017:09:41 IST Report Abuse
SATHIK BASHA ஒன்பது மாநில முதல்வர்கள் நீட் ஐ எதிர்த்து வழக்கு போட்டது தெரியாது போல.
Rate this:
Srinivasan Desikan - chennai,இந்தியா
16-செப்-202018:26:09 IST Report Abuse
Srinivasan Desikanநான் 'நீட்' தேர்வை ஆதரிப்பேன், ஆனால் ஒரே ஒரு கண்டிஷன், அதற்கு மத்தியஅரசு ஒத்துகொண்டால் தனிஆளாக அரசுக்கு ஆதரவாக இந்தியா முழுமைக்கும் சைக்கிள் பயணம் செய்வேன், இதோ என் கண்டிஷன் உடனடியாக இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவின் சுதந்திரபோரட்ட வராலாற்றினை மையாகமாக வைத்து இந்தியாவின் வரலாறு மற்றும் பொலிடிகல் சயின்ஸ் ஆகியவற்றில் திறமை வாய்ந்த ஒய்வுபெற்ற மூத்தபேராசிரியர்கள் கொண்ட குழுவால் தயாரிக்கபட்ட இந்திய அரசியல்சாசன தேர்வை அரசாங்கம் எம்பி மற்றும் எம்எல்ஏக்காக நடத்தவேண்டும், இதில் தேர்ச்சிபெறுபவர்கள் பதவியை தொடரலாம், மற்றவர்கள் உடனடியாக பதவிவிலகவேண்டும்,...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-செப்-202017:06:24 IST Report Abuse
sankaseshan கல்வி கடல் சுடலை புத்திரன் சொல்லிட்டார் கேளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X