முத்தியால்பேட்டையில் சாலை மறியல்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 முத்தியால்பேட்டையில் சாலை மறியல்

புதுச்சேரி : மின் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, முத்தியால்பேட்டை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின்சார கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்துறை அலுவலகத்துக்கு சென்று கேட்டால் சரியான விளக்கம் தரவில்லை என்று கூறி முத்தியால்பேட்டை பகுதி மக்கள், மார்க்கெட் எதிரில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதனையேற்று மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன் மறியல் நடந்த இடத்திற்கு வந்தார்.மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்களின் குறைகளை வையாபுரி மணிகண்டன் விளக்கி கூறினார். மின் கட்டணம் சரியாகவே கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குளறுபடிகளை தீர்ப்பதற்கு, வரும் வியாழக்கிழமையன்று, மின்துறை சார்பில் முகாம் நடத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் மின் கட்டண ரசீதை மின்துறை அதிகாரிகளிடம் காண்பித்தால், அளவீடு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் தர வேண்டும். மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருந்தால் அதனை சரி செய்து தர வேண்டும் என எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.வியாழக்கிழமையன்று முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். எம்.எல்.ஏ.,வின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X