பொது செய்தி

இந்தியா

3 ஆண்டுகளில் 4,132 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Paramilitary, Die, OnDuty, 3Years, MinistryofHomeAffairs, பாதுகாப்பு, வீரர்கள், மரணம், அமைச்சர்

புதுடில்லி: இந்தியாவில் 2017 முதல் 2019 வரையிலான 3 ஆண்டுகளில் 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழந்துள்ளதாக, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் எழுப்பபட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்: 2017 முதல் 2019 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சிஆர்பிஎப் படையைச் சேர்ந்தவர்கள் 1,597 பேரும், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 725 பேரும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 671 பேரும், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த 429 பேரும், பணியின் போது உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 100 போலீசார் உயிரிழந்துள்ளனர். இதில், எல்லைப் பாதுகாப்புப் படையில் 23 பேரும், ரிசர்வ் போலீஸ் படையில் 35 பேரும், தொழில்துறைப் பாதுகாப்புப்படையில் 24 பேரும், இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்துறையில் 7 பேரும், சசஸ்த்ர சீமா பல் மற்றும் அசாம் ரைபிள்ஸில் தலா ஐந்து பேரும் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swamy - pondicherry,இந்தியா
16-செப்-202017:19:40 IST Report Abuse
Swamy ஒரு ரெண்டு வருடம் நமது அரசியல் வியாதிகளின் பிள்ளைகளையும் ராணுவத்தில் பணியாற்ற சொன்னால் என்ன?
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
16-செப்-202012:51:50 IST Report Abuse
vnatarajan நாட்டில் மக்களை பாதுகாக்கும் நமது பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருக்கும்போது வீரமரணம் அடைகிறார்கள் அவர்களுக்கு ஏன் மக்கள் மற்றும் மாநில சபைகளில் அஞ்சலி செலுத்துவதில்லை . ஸ்டேட் அசெம்பிளியில் நீட் தேர்வுக்கு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பும் டிஎம்கே தங்கள் எம்பிக்கள் மூலம் இருசபைகளிலும் அஞ்சலி செலுத்த ரசலூஷன் கொண்டுவரக்கூடாதா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X