பொது செய்தி

தமிழ்நாடு

இளநிலை உதவியாளர் நேர்முக தேர்வு: 17, 18ல் ஈரோட்டில் நடக்கிறது

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஈரோடு: பள்ளி கல்வித்துறையில், காலியாக உள்ள, இளநிலை உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு, ஆன்லைனில் நடக்கிறது. பள்ளி கல்வி துறையில், காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், கடந்தாண்டு செப்., மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும், நாளை, நாளை மறுதினம் (17, 18 தேதிகள்) ஆன்லைனில் கலந்தாய்வு நடக்கிறது. தேர்வாணைய பட்டியல் வரிசை எண் ஒன்று முதல், 330 வரை உள்ளவர்களுக்கு, 17ம் தேதியும், 331 முதல், 644 வரை எண் உள்ளவர்களுக்கு, 18ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு ஆஜராக வேண்டும். மாவட்டத்தில், 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வில், 42 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X