தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பள பாக்கி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பள பாக்கி

Added : செப் 16, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 14 யூனியனில் உள்ள, 225 பஞ்சாயத்துக்களில், 1,000க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆப்பரேட்டர்கள் பணி செய்கின்றனர். இதில் டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு, 4,800 ரூபாய், தூய்மை பணியாளர்களுக்கு, 7,800 ரூபாய் சம்பளமாக, பஞ்., மூலம் வழங்கப்படுகிறது. மூன்று மாதமாக இவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுபற்றி தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணிகளில் முதன்மை பணியாளர்களாக, தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொடுமுடி, அம்மாபேட்டை, தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர் உட்பட பல யூனியனில், மூன்று மாதமாக ஊதியம் வழங்கவில்லை. பஞ்.,களில் விபரம் கேட்டபோது, எந்த வரியும் வசூலிக்க முடியவில்லை. அரசு சார்பில் நிதி வரவில்லை. கிடைக்கும் நிதியை வைத்து, கொரோனா தடுப்பு பணிகளுக்கான பொருட்களை வாங்குவதே சிரமமாக உள்ளது. அரசு நிதி வந்த பிறகே கிடைக்கும் என்கின்றனர். விரைந்து சம்பளம் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X