பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை 112வது பிறந்த நாள் விழா: அ.தி.மு.க.,- தி.மு.க.,வினர் மரியாதை

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஈரோடு: முன்னாள் முதல்வர் அண்ணா துரை, 112வது பிறந்த நாளையொட்டி, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து, நேற்று மரியாதை செலுத்தினர்.

* ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் ராமசாமி தலைமை யில், பகுதி செயலாளர்கள் பழனி சாமி, மனோகரன், ஜெகதீசன், கேசவமூர்த்தி உட்பட பலர், மாலை அணிவித்தனர்.


* ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை


செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் உட்பட பலர், மரியாதை செலுத்தினர்.


* ம.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி மாலை அணிவித்தார்.

புன்செய்புளியம்பட்டியில்...: புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, அண்ணாதுரை சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில், நகர செயலாளர் மூர்த்தி தலைமையிலும், தி.மு.க., சார்பிலும், மரியாதை செலுத்தப்பட்டது. பவானிசாகர், பயணியர் மாளிகை எதிரே உள்ள, அண்ணாதுரை சிலைக்கு, அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X