ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்தோர், 4,668 பேர் இருந்தனர். நேற்று புதிதாக, 135 பேருக்கு தொற்று உறுதியாகி, 4,803 என்றானது. மாநகராட்சி பகுதியை சேர்ந்த, 45 வயது ஆண் இறந்தார். இதனால் பலி, 63 ஆக உயர்ந்தது. இதுவரை, 3,694 பேர் குணமடைந்துள்ளனர்; 1,046 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநகரில் 200 வீடுகள் தனிமை: ஈரோடு மாநகரில், நேற்றைய நிலவரப்படி, 200 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா தொற்றில், நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில், 35 முதல், 40 பேர், மாநகரை சேர்ந்தவர்களாக உள்ளனர். நேற்றைய நிலவரப்படி நான்கு மண்டலங்களில், 200 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகள் மட்டுமின்றி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகளை பின்பற்றி, மக்கள் நடந்ததால், தனிமைப்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை குறையும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.
பி.சி.ஆர்., பரிசோதனை: மாநகரில் ஐந்து இடங்களில், பி.சி.ஆர்., பரிசோதனை மையம் உள்ளது. இவற்றில் தினசரி, 450 பேர் முதல், 600 பேர் வரை சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில், பி.சி.ஆர்., சோதனை எடுக்க விரும்பினால், மாநகராட்சி சார்பில் நேரடியாக சென்று, பரிசோதனை செய்யப்படுகிறது. பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய விரும்பும், தனியார் நிறுவனங்கள், மாநகராட்சியை அனுகலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE