பொது செய்தி

இந்தியா

ஏடிஎம்-ல் 10 ஆயிரத்திற்கு மேல் எடுத்தால் ஓடிபி: எஸ்பிஐ கிடுக்கிப்பிடி

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இது வரும் 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.



latest tamil news




எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளதாவது:எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் இனி, ஓ.டி.பி., சரிபார்ப்பிற்குப் பிறகே, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எம்.,ல் இருந்து எடுக்க முடியும். வாடிக்கையாளர் வங்கியில் பதிவுசெய்த மொபைல்போன் எண்ணுக்கு அந்த ஓ.டி.பி., எண் அனுப்பப்படும். இது ஒரு கூடுதல் பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. இந்த புதிய நடைமுறையால், அட்டைதாரர்களைத் தவிர வேறு யாரும் பணத்தை ஏ.டி.எம்.,ல் இருந்து எடுக்காமல் தடுக்க முடியும்.


latest tamil news



இந்த நடைமுறையை, கடந்த ஜனவரி மாதத்தில், இரவு 8:00 முதல் காலை 8:00 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். அது நல்ல பலனை அளித்தது. குற்றங்கள் தடுக்கப்பட்டது. இதனால் இந்த நடைமுறை வரும் 18ம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வருகிறது.
மற்ற வங்கியின் ஏ.டி.எம்.,ல் எஸ்.பி.ஐ., அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202020:50:51 IST Report Abuse
DMK  வந்தாதான் நாடு செழிக்கும் அப்புறம் எப்படி YES BANK LOSS எப்படி சரி பண்ணுவார்கள்
Rate this:
Cancel
S VENKATESAN - MADURAI,இந்தியா
16-செப்-202020:25:41 IST Report Abuse
S VENKATESAN மற்ற வங்கியின் ஏ.டி.எம்.,ல் எஸ்.பி.ஐ., அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது. யோசனை நல்ல யோசனை ஆனா வண்டி உடைஞ்சுபோச்சு - தெலுகு பழமொழி
Rate this:
Cancel
S VENKATESAN - MADURAI,இந்தியா
16-செப்-202020:23:09 IST Report Abuse
S VENKATESAN மற்ற வங்கியின் ஏ.டி.எம்.,ல் எஸ்.பி.ஐ., அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது. திருட்டு பய எஸ்.பி.ஐ -ல தான் திருடனும்னு கொள்கை வச்சிருக்கான என்ன? இந்த அட்டையை வேற பேங்க் ஏ T எம் ல போட்டு ஆட்டய போட்டுட்டு போறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X