பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களை வெட்டுவதில் விரைவு; கன்றுகளை நடுவதில் தொய்வு: நெடுஞ்சாலை துறை மீது வருத்தம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

அந்தியூர்: அந்தியூர் அருகே, அண்ணாமடுவு-அம்மாபேட்டை சாலை, அண்ணாமடுவு-பவானி சாலை விரிவாக்க பணிகளுக்காக, சாலையோரத்தில் இருந்த, 100க்கும் மேற்பட்ட மரங்களை, நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றினர். ஓராண்டு கடந்தும், வெட்டிய மரக்கன்றுகளுக்கு ஈடாக, ஒரு மரக்கன்று கூட நடாமல், அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால், மரக்கன்றுகள் வைத்தால், செழித்து வளர வாய்ப்புள்ளது. இனியும் தாமதம் செய்யாமல், மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கூறி, ஈரோடு வடக்கு மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில், ஈரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில், மனு அளித்தனர். மேலும், கெட்டிசமூத்திரம் அருகே ஆத்தப்பம்பாளையம் பிரிவில், அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது. அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவும், வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X