பொது செய்தி

தமிழ்நாடு

கொடுமுடி புது மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் முறைகேடு: முதல்வர், கலெக்டருக்கு பறந்த புகார்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: கொடுமுடி புது மாரியம்மன் கோவிலில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. விரிவான விசாரணை நடத்தக்கோரி, முதல்வர் தனிப்பிரிவுக்கு, கொடுமுடி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.


மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, மூன்று கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த புகாரில், கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் பதவி வகித்த காலத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, கொடுமுடி புது மாரியம்மன் கோவில் குடமுழுக்கு கடந்தாண்டு நடந்தது. அப்போது பா.ஜ.,வை சேர்ந்த ஒருவர் தலைமையில், காங்., கட்சியை சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு, மக்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை, வசூலித்ததாக தெரிகிறது. வசூலுக்கு தலைமை வகித்த ஆசாமி, முறைகேட்டிலிருந்து தப்பிக்க, சில மாதங்களுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்தார். இவர்கள் பணம் வசூலிக்க, அதிகாரம் தந்தது யார்? வசூல் பணத்தில் என்னென்ன பணிகள் செய்தனர் என்பது குறித்து, விசாரணை நடத்த வேண்டும். மேலும், கட்டளைதாரர்கள் பெயரில், ஆண்டுதோறும் மக்களிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய் என, 10 ஆண்டுகளாக, 60 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். இது தொடர்பாக, விரிவான விசாரணை நடத்தி, முறைகேடாக வசூலித்த பணத்தை மீட்டு, கோவில் நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். முதல்வர் தனிப்பிரிவுக்கு மட்டுமின்றி, ஈரோடு கலெக்டர், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நேரிலும், தபால் மூலமும், கொடுமுடியை சேர்ந்த முருகேசன், நடேசன், லோகாம்பாள், ஈஸ்வரன் ஆகியோர், மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X