பொது செய்தி

தமிழ்நாடு

அரசு முடிவு கூறும் வரை ஐ.டி.பி.எல்., பணிகள் நிறுத்தம்; பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், ஐ.டி.பி.எல்., திட்டப்பணிகளை, அரசு முடிவு அறிவிக்கும் வரை நிறுத்தி வைப்பது என, பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.


கோவை மாவட்டம் இருகூர் முதல், கர்நாடகா மாநிலம் தேவனஹந்தி வரை, பாரத் பெட்ரோலிய நிறுவன பைப்லைன் கொண்டு செல்லும், ஐ.டி.பி.எல்., திட்டம் நடந்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் வழியாக, குழாய் பதிப்பு பணி நடக்கிறது. குழாய் பதிக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை, விவசாய பணி, வீடு கட்டுதல், கிணறு தோண்டுதல், ஆழ்துளை கிணறு அமைத்தல், மரம் நடுதல் போன்ற எந்த பணிகளும் செய்யக்கூடாது. எனவே, விளை நிலங்கள் வழியாக பைப்லைன் கொண்டு செல்வதை கைவிட்டு, சாலை ஓரமாக கொண்டு செல்ல வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர். இதனால், ஐ.டி.பி.எல்., திட்ட பாதிப்பு விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில், நேற்று முதல், ஆறு மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவித்தனர். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், போராட்டத்தை கைவிட மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியது. இந்நிலையில், நேற்று காலை மொடக்குறிச்சியில் ஆர்.டி.ஓ., சைபுதீன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. தி.மு.க., எம்.பி., கணேசமூர்த்தி, கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, பொன்னையன், தாசில்தார் ரவிசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்குப்பின், போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

இது குறித்து, ஒருங்கிணைப்பாளர் முனுசாமி கூறியதாவது: கொரோனாவுக்கான ஊரடங்கு நிலை தொடர்கிறது. இந்த நேரத்தில் அதிகளவில் விவசாயிகள் கூடுவதாலும், தொடர் போராட்டத்தை நீடிப்பதாலும், கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி, அரசிடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும். அரசு முடிவு அறிவிக்கும் வரை, விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டாம். அதுபோல, ஐ.டி.பி.எல்., திட்டப்பணிகளும், அதுவரை நிறுத்தி வைக்கப்படும். இதனால், தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X