சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரப்பன் சத்திரத்தில் விசைத்தறி கூடத்தில் தீ

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில், காவேரி ரோட்டில் நாராயணன், 56, என்பவருக்கு சொந்தமான, விசைத்தறி கூடம் செயல்படுகிறது. இங்கு, 17 விசைத்தறிகளில் காடா துணி, அரசின் இலவச வேட்டி, சேலை தயாரிக்கப்படுகிறது. நேற்று மாலை இரு தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது கூடத்தில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பரவி, காடா துணி, இலவச வேட்டி, சேலைகள், நூல் பண்டல்களில் பற்றி எரிந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், இரு வாகனங்களில் சென்று தண்ணீர், நுரை கலவை அடித்து, 45 நிமிடங்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும், தொடர்ந்து புகை வந்ததால், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீப்பிடிப்பதை தவிர்க்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X