சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரை கொன்று ஆடு திருடிய கொடூர ஆசாமிகள் மூவர் கைது

Added : செப் 16, 2020
Share
Advertisement

பவானி: பவானி அருகே, முதியவரை கொலை செய்து, ஆடு திருடிய கொடூர ஆசாமிகள் மூவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். பவானியை அடுத்த பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் முனுசாமி, 75; ஆடு வளர்த்து, பிழைத்து வந்தார். அதே பகுதியில் உள்ள மலை கரட்டில், கடந்த, 12ம் தேதி, ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மூன்று பேர், அவரின் கை, கால்கள் மற்றும் மூக்குடன் சேர்த்து, வாயையும் கட்டிப்போட்டு, ஒரு ஆட்டை திருடிக் கொண்டு, மொபட்டில் தப்பினர். கட்டிப்போட்டதில் மூச்சு திணறி முதியவர் இறந்தார். 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், சித்தோடு போலீசார், கொலைகார களவாணிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக, பவானி, சேர்வராயன்பாளையத்தை சேர்ந்த ஜானகிராமன், 33, சுதாகரன், 20; நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், 34, ஆகியோரை, தனிப்படை போலீசார், நேற்று கைது செய்தனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X