சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளை கும்பலின் போட்டோ வைரல்; போலீசார் 'திடுக்': தலைமறைவு குற்றவாளி படமும் வந்ததால் அதிர்ச்சி

Added : செப் 16, 2020
Share
Advertisement

சத்தியமங்கலம்: வனத்துறை அலுவலக, ஜீப் டிரைவர் வீட்டில் கொள்ளை யடித்த, ஒன்பது பேரின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருவது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


சத்தியமங்கலம் அருகேயுள்ள அரியப்பம்பாளையம், செங்குந்தர் நகரை சேர்ந்த வனத்துறை அலுவலக ஜீப் டிரைவர் சஜீவன், 40; இவரது வீட்டுக்குள் கடந்த 8ல், புகுந்த முகமூடி கும்பல், 13 பவுன் நகை, 70 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக கடந்த, 13ல், ஒன்பது பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சத்தி போலீஸ் ஸ்டேஷனில், நிருபர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி., தங்கதுரை, கொள்ளையில் ஈடுபட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவான ஒருவரை தேடி வருகிறோம் என்றார். கைதான ஒன்பது பேரையும், புகைப்படம் எடுக்க நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாகி விட்டதாக, போலீசாரால் கூறப்படும், குற்றவாளி உட்பட, 10 பேரின், கை விலங்கு மாட்டிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'க்ளிக்' செய்தது போலீஸ்காரர்? குற்றவாளிகளை கை விலங்கு மாட்டிய நிலையில், புகைப்படம் எடுக்க போலீசார் அனுமதிப்பதில்லை; இந்நிலையில் கை விலங்கு மாட்டிய நிலையில், புகைப்படங்கள் வெளியானதால், அதை எடுத்தது ஒரு போலீசாராக இருக்கலாம், என சந்தேகம் எழுந்துள்ளது.

கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? கொள்ளை சம்பவத்தில், ஒருவர் தலைமறைவாகி விட்டதாக, எஸ்.பி., தெரிவித்த நிலையில், அவரது புகைப்படமும் வைரலாகி வருவது, போலீசார் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொள்ளையனுக்கு மட்டும் விசுவாசம் காட்டியுள்ளனரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. வைரலாகும் புகைப்படம், ஒருவருக்கு மட்டும் விசுவாசம் போன்ற நியாயமான கேள்விக்கு, மாவட்ட காவல்துறைதான் பதில் சொல்ல வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X