பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை

Added : செப் 16, 2020
Share
Advertisement

தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, சிவன் கோவில்களில் நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரம் நடந்தது.


பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று, தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு மாலை, 4:30 மணிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு, மூலவர் மஹாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று, பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரம் நடந்தது.


* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தன. இதேபோல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் நடந்த, சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X