பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் வாணியாறு அணை நீர்மட்டம் உயர்வு

Added : செப் 16, 2020
Share
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: தொடர் மழையால், வாணியாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து உள்ளது. வாணியாறு அணை மூலம், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம் உட்பட, 16 கிராமங்களில் உள்ள, 10 ஆயிரத்து, 517 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி டவுன் பஞ்., மற்றும் வெங்கடசமுத்திரம், மோளையானூர் பஞ்.,க்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், புதிதாக ஷட்டர் பொருத்தும் பணிக்காக அணையிலிருந்து, தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த, சில வாரங்களாக பெய்த தொடர்மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த, 4ல் அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், 38 அடியாக இருந்த நீர்மட்டம், 11 நாட்களில், 10 அடி வரை உயர்ந்து, நேற்று, 48 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 40 கன அடி நீர்வரத்து உள்ளது. வாணியாறு அணை நீர்மட்டம் தற்போது, 48 அடிக்கு உயர்ந்துள்ளதால், நடப்பாண்டில், அணை முழுமையாக நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, பாசன ;விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X