டாஸ்மாக் கடை அருகே கிடந்த ஆண் சடலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடை அருகே கிடந்த ஆண் சடலம்

Added : செப் 16, 2020
Share

ஓசூர்: ஓசூரில், டாஸ்மாக் கடை அருகே, மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓசூர், அடுத்த கோவிந்த அக்ரஹாரம் - பேகேப்பள்ளி சாலையில் உள்ள, டாஸ்மாக் கடை அருகே, 35 முதல், 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக, பேகேப்பள்ளி வி.ஏ.ஓ., மூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அவரது புகாரின்படி, சிப்காட் போலீசார் சடலத்தை மீட்டு, விசாரித்தனர். இறந்த நபரின் உடலில் காயங்கள் இல்லாததால், நோய் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின் தான், உண்மையான காரணம் தெரியும் என, போலீசார் தெரிவித்தனர். இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X