சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணமான பெண்ணை குடும்பம் நடத்த அழைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் கைது

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே, திருமணமான பெண்ணை தன்னுடன் குடும்பம் நடத்த வரக்கூறி, வற்புறுத்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் கைது செய்யப்பட்டார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த திருமலை கவனிகோட்டாவை சேர்ந்த மஞ்சுநாத் மனைவி சுகுணா, 26; இவருக்கும், ஜம்முவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக பணியாற்றி வரும், அரியலூர் மாவட்டம், உத்தப்பள்ளத்தை சேர்ந்த அரவிந்த்குமார், 28, என்பவருக்கும், 'பேஸ்புக்' மூலம் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. சுகுணா தனக்கு, திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளதை மறைத்து பழகி வந்துள்ளார். கடந்த ஜனவரியில் அரவிந்த்குமாருடன் அரியலூர் மாவட்டத்துக்கு, சுகுணா சென்று விட்டார். அவரது கணவர் மஞ்சுநாத் புகாரின்படி, சுகுணாவை சூளகிரி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் இருந்த சுகுணாவை, அம்மாவட்ட போலீசார் உதவியுடன் மீட்ட போலீசார், கணவர் மஞ்சுநாத்துடன் அனுப்பி வைத்தனர். கடந்த, 13ல், திருமலை கவனிகோட்டா சென்ற அரவிந்த்குமார், சுகுணாவை தன்னுடன் குடும்பம் நடத்த வரக்கூறி அழைத்துள்ளார். இது தொடர்பாக, சுகுணா புகாரின்படி, பெண் துன்புறுத்தல் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த, சூளகிரி போலீசார், அரவிந்த்குமாரை கைது செய்து, ஓசூர் கிளைச்சிறையில் அடைத்தனர். அதேபோல், திருமலை கவனிகோட்டா கிராமத்தில், மர்ம நபர்கள் சிலர், தன்னை அடித்ததாக அரவிந்த்குமார் புகாரின்படி, சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X