சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு ஓராண்டு சிறை

Added : செப் 16, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: மின் இணைப்புக்கு, ஆவணம் வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், வி.ஏ.ஓ.,வுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஐபிகானப்பள்ளியை சேர்ந்தவர் சின்ன தம்மண்ணன். இவர், மின் இணைப்புக்காக, ஆவணம் கேட்டு, கிருஷ்ணகிரி தாலுகா நல்லூர், வி.ஏ.ஓ., ஜனகரன் என்பவரிடம் கடந்த, 2013ல் விண்ணப்பித்திருந்தார். அந்த ஆவணம் கொடுக்க, 500 ரூபாய் லஞ்சமாக, வி.ஏ.ஓ., கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத சின்ன தம்மண்ணன், இது குறித்து, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து, போலீசாரின் ஆலோசனைப்படி, 500 ரூபாய் லஞ்ச பணத்தை, வி.ஏ.ஓ., ஜனகரனிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., ஜனகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கணேசன் விசாரித்து, நேற்று தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட வி.ஏ.ஓ., ஜனகரனுக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் மேலும், ஆறு மாத சிறை தண்டனையும் அனுபவிக்க, நீதிபதி தீர்ப்பளித்தார். வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வக்கீல் இளங்கோ ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X