பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய ராணுவ கல்லூரியில் சேர வரும் 30க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: இந்திய ராணுவ கல்லூரியில் சேர, விண்ணப்பிக்க வரும், 30 கடைசி என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில், ஜூலை, 2021 பருவத்தில் சேருவதற்கான தேர்வு வரும் டிச., 1, 2ல் சென்னையில் தேர்வு நடக்கிறது. விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை 'கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட் - 248 003' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன் என்ற பெயரில், உத்தரகாண்ட், டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு, 01576) செல்லத்தக்க வகையில், பொது பிரிவினர், 600 ரூபாய், தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர், 555 ரூபாய் என, கேட்பு காசோலை அனுப்பி பெறலாம். இணைய வழியில், www.rimc.gov.in என்ற முகவரி மூலமாகவும் பெறலாம். விண்ணப்பதாரர்கள், தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். 2021 ஜூலை, 1ல், 13 வயதை அடைந்தவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில், ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ, படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு வரும், 30க்குள் சென்று சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X