பொது செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஓசூர்: தளி தொகுதி, தே.மு.தி.க., நிர்வாகி, பா.ஜ., கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதியில் கடந்த, 2006 தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டவர் ஹரி. அதேபோல், 2016ல், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட, சீட் கிடைக்காததால், சுயேச்சையாக களம் இறங்கினார். அதன் பின், தே.மு.தி.க.,வின் விசுவாசியாக மட்டும் இருந்த அவர், வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., செயற்குழு கூட்டத்தின் போது, தன் ஆதரவாளர்கள், 500க்கும் மேற்பட்டோருடன் சென்ற ஹரி, தன்னை பா.ஜ.,வில் இணைத்து கொண்டார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் நாகராஜ், மாநில செயலாளர் கார்த்தியாயினி ஆகியோர், அவருக்கு கட்சி சால்வை அணிவித்து வரவேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோடீஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுசில் மனோகர், மாவட்ட செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X