பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பணியை தடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டதால், அப்பகுதி தனிமைப் படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த, 12ல், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் டவுன் பஞ்., அலுவலர்கள், முன்னெச்சரிக்கை பணி மேற்கொண்டனர். ஆனால், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல், தி.முக.,வை சேர்ந்த, 13வது வார்டு முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் தடுத்தனர். இது தொடர்பாக, மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், நேற்று முன்தினம் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதன்படி அவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X