பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை பிறந்த நாள் விழா

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஓசூர்: அண்ணாதுரை பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஓசூர் மாநகர, அ.தி.மு.க., சார்பில், அண்ணா நகரில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, மாநகர செயலாளர் நாராயணன் தலைமையில், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். சூளகிரி ரவுண்டானா அருகே, சூளகிரி ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலாளர்கள் ஹேம்நாத், பாலசுப்பிரமணி ஆகியோர், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஓசூர், தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், ஓசூர் நகராட்சி முன்னாள் தலைவர் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், ராசுவீதியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமையில் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகிலும், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமையில், ராயக்கோட்டை சாலை அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகிலும், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், அண்ணாதுரை படத்துக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


* தர்மபுரி நான்குரோட்டில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில், விவசாய அணி மாநிலத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர செயலாளர் ரவி, யூனியன் சேர்மன் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், தி.மு.க., சார்பில் நகர கழக செயலாளர் தங்கராஜ் தலைமையில், அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், வக்கீல் பிரிவு நிர்வாகி மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X