பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நேற்று 75 பேருக்கு கொரோனா

Added : செப் 16, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று, 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 3,327 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 38 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். கிருஷ்ணகிரியை சேர்ந்தவர், 66 வயது ஆண். இவர் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறலால் கடந்த, 11ல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை, 45 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X