பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதலாக 20 சதவீதத்துக்கு அனுமதி: நாளை முதல் மாணவர் சேர்க்கை

Added : செப் 16, 2020
Share
Advertisement

இடைப்பாடி: பெரியார் பல்கலை உறுப்பு கல்லூரியில், கூடுதலாக, 20 சதவீத மாணவர்களை சேர்க்க அனுமதி கிடைத்ததால், நாளை முதல் சேர்க்கை நடக்க உள்ளது.


இதுகுறித்து, இடைப்பாடியில் உள்ள, பெரியர் பல்கலை உறுப்பு கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இளநிலை பாடப்பிரிவு சேர்க்கை முடிந்தது. ஆனால், 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு, அனுமதி கிடைத்துள்ளது. அதனால், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுக்கு, நாளை (செப்., 17) முதல், சேர்க்கை நடக்க உள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில், சேர்க்கை நடப்பதால், மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். முதுநிலை பாடங்களில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம் ஆகியவற்றுக்கு, விண்ணப்பங்கள், செப்., 16(இன்று) முதல் வழங்கப்படும். இச்சேர்க்கை, பெரியார் பல்கலை இளநிலை தேர்வு முடிவு வெளியாகும் நாளில் இருந்து, 10 நாள் வரை, விண்ணப்பங்கள் வழங்கி, பூர்த்தி செய்தவை பெறப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X