பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக 292 பேருக்கு கொரோனா; இதுவரை 15,066 பேர் பாதிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement
சேலம்: சேலத்தில், நேற்று புதிதாக, 292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 66 ஆக அதிகரித்தது.சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஒரு குழந்தை, எட்டு ஆண்கள், 11 பெண்கள் குணம் அடைந்ததால், நேற்று, வீடு திரும்பினர். இதுதவிர, ஒரேநாளில் நேற்று, 292 பேர், தொற்றுக்கு ஆளாகினர். அதன்படி, சேலம் மாநகராட்சியில், 209

சேலம்: சேலத்தில், நேற்று புதிதாக, 292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 66 ஆக அதிகரித்தது.


சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஒரு குழந்தை, எட்டு ஆண்கள், 11 பெண்கள் குணம் அடைந்ததால், நேற்று, வீடு திரும்பினர். இதுதவிர, ஒரேநாளில் நேற்று, 292 பேர், தொற்றுக்கு ஆளாகினர். அதன்படி, சேலம் மாநகராட்சியில், 209 பேர், சேலம் ஒன்றியம், வீரபாண்டி தலா, 10, சங்ககிரி, 9, ஓமலூர், 8, பனமரத்துப்பட்டி, 5, மேட்டூர் நகராட்சி, நங்கவள்ளி, தலா, 4, கெங்கவல்லி, 3, இடைப்பாடி, கொங்கணாபுரம், மேச்சேரி, ஏற்காடு தலா, 2, இடைப்பாடி நகராட்சி, காடையாம்பட்டி, கொளத்தூர், தாரமங்கலம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசலில் தலா ஒருவர் உள்பட, மாவட்டத்தில், 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, நாமக்கல், கிருஷ்ணகிரி தலா, 2, விழுப்புரம், திருச்சி, கோவை, தர்மபுரி, ஈரோடு, தலா ஒருவர், கர்நாடகா ஒருவர் என, 292 பேருக்கு, சேலத்தில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, சேலத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 66 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்கள், 240 பேர் அடங்கும்.

ஏட்டு, போலீசுக்கு உறுதி: மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர், 30 வயது ஆண். இவருக்கு, நேற்று முன்தினம் மேற்கொண்ட சோதனையில், தொற்று உறுதியானது. அவர், இடைப்பாடி அரசு கலைக்கல்லூரியில், நேற்று அனுமதிக்கப்பட்டார். அதேபோல், இளம்பிள்ளை, பழக்காரதோட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 48 வயது ஆண், அவரது, 45 வயது மனைவி, அவர்களது, 25 வயது மகள் ஆகியோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று அனுமதிக்கப்பட்டனர்.


* இடைப்பாடி, நைனாம்பட்டியைச் சேர்ந்தவர், 41 வயது ஆண். தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார். இவர், அயல் பணியாக, ஓமலூர் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு, தொற்று இருப்பது, நேற்று உறுதியானதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X