பொது செய்தி

தமிழ்நாடு

இளநிலை உதவியாளர் பணி: 17, 18ல் இணையவழி கலந்தாய்வு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சேலம்: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வாகி, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, 17, 18ல் இணையவழி கலந்தாய்வு நடக்க உள்ளது.


இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கு, இணையவழி கலந்தாய்வு, சேலத்தில், செப்., 17(நாளை), 18ல் நடக்க உள்ளது. நான்கு ரோடு, சிறுமலர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், காலை, 8:30 மணி முதல் கலந்தாய்வு நடக்கும். 17ல், தேர்வாணைய பட்டியல் வரிசை எண், 1ல் இருந்து, 330 வரையும், 18ல், 331 முதல், 644 வரையும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வாகி, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர், உரிய அசல் ஆவணங்கள், ஜாதி சான்றிதழ், மருத்துவ உடற்தகுதி சான்றுடன் பங்கேற்கலாம். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X