பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஓமலூர்: பிரதோஷத்தையொட்டி, பக்தர்கள் இல்லாமல், கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அபி?ஷகம் நடந்தது.


கொரோனா பரவலை தடுக்க, தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், பிரதோஷம், அமாவாசை நாளில், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. அதனால், பிரதோஷமான நேற்று, குருக்கள் மட்டும் பங்கேற்று, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்திக்கு, பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருள்களால் அபி?ஷகம் செய்தனர். அதேபோல், ஓமலூர் காசிவிஸ்வநாதர், கடைவீதி அண்ணாமலையார் கோவில்களில், குறைந்தளவிலான பக்தர்கள் முன்னிலையில் பிரதோஷ பூஜை நடந்தது. தலைவாசல், வீரகனூர், தென்கரை, கங்கா சவுந்தரேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. அதில், மூலவர் சவுந்தரேஸ்வரருக்கு, வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கைலாய தரிசனத்தில் அருள்பாலித்தார். கங்கா தேவிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், நந்தி தேவருக்கு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். அப்போது, காயநிர்மலேஸ்வரர், நந்தி தேவர், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தனர். மேலும், ஆறகளூர் காமநாதீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X