பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலையத்தை சுற்றி மண் வெட்டியெடுப்பு; கண்டு கொள்ளாத வருவாய்த்துறை

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஓமலூர்: விமான நிலையத்தை சுற்றி, பட்டா நிலங்களில், மண் வெட்டி எடுக்கப்படுவது குறித்து, வருவாய்த்துறை கண்டு கொள்ளவில்லை.


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, காமலாபுரம் விமான நிலையம், 128 ஏக்கரில் செயல்படுகிறது. தற்போது, பயணியர் விமான சேவை உள்ளது. விமான நிலையத்தை விரிவுபடுத்த, மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்காக, காமலாபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம் பகுதிகளில், 571 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டது. அந்த இடங்களில், புறம்போக்கு, பட்டா நிலம், அதில் உள்ள வீடுகள், நஞ்சை, புஞ்சை கணக்கீடு விபரம் கணக்கிடப்பட்டு, அதன் அறிக்கை, விமான போக்குவரத்து துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இந்நிலையில், அரசு கைப்பற்ற உள்ள பட்டா நிலங்களில், பொக்லைன் மூலம், மண் வெட்டி, டிப்பர் லாரிகளில் எடுத்துச்செல்லப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு, அரசு எப்படியும், தங்கள் நிலத்தை கையகப்படுத்திவிடும் என்பதால், நிலத்தில் உள்ள மண்ணை, அதன் உரிமையாளர்களே, அரசு அனுமதியின்றி, செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விற்கின்றனர். இதனால், விமான நிலையத்தை சுற்றி, பல்வேறு இடங்களில், பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, காமலாபுரம் ஓடுதள நுழைவாயில் அருகே, 10 அடி ஆழத்தில், பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலைய சுற்றுச்சுவர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு மாதமாக, பல்வேறு இடங்களில் இருந்து, மண் எடுத்துச்செல்லப்படுவது குறித்து, வருவாய்த்துறை, ஊராட்சி அதிகாரிகளிடம், விமான நிலைய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஓமலூர் தாசில்தார் கணேஷ்குமார் கூறுகையில், ''மண் அள்ளும் விவகாரம் குறித்து, வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,விடம் விசாரிக்க அறிவுறுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X