சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு கொரோனா

Added : செப் 16, 2020
Share

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு கொரோனா உறுதியானது. சேலம் மாநகர போலீசில், இதுவரை, 83 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மூன்று பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் குணமாகினர். இந்நிலையில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், 52, நேற்று முன்தினம், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால், அவர், அலுவலகம் வருவதை தவிர்த்து, பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, தன் தாயை கவனிக்க, அடிக்கடி மருத்துவமனைக்கு, கமிஷனர் சென்று வந்த நிலையில், தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கமிஷனருக்கு கொரோனாவால், போலீசார், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X