பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் புரட்டாசி சனி தரிசனம்: 'ஆன்லைன்' பதிவு அறிமுகம்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்து, புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திவ்ய தேசங்களில் முதன்மையான, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்துக்கு வருவர். கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், ரெங்கநாதர் கோவிலில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே, தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், பக்தர்கள் கூட்டமாக சேர்ந்து காத்திருப்பதை தவிர்ப்பதற்காக, கட்டணமில்லா மற்றும் கட்டண தரிசனத்துக்கு, இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'இதன்படி, www.srirangam.org என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே, வரும், 19, 26ம் தேதி, அக்டோபர், 3 மற்றும், 10ம் தேதிகளில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்' என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202016:08:01 IST Report Abuse
ராஜா Srivilliputhur ஆண்டாள் கோயிலில் முக்கிய நைவேத்தியம் நிறுத்தமாம். படி அளக்கும் ஆண்டாள் பட்டினி . கோவில் அர்ச்சகர்கள் ஒரு கொத்தடிமைகள் போல் உள்ளனர். ராமேஸ்வரம், பழனி, திருச்செந்தூர் போன்ற கோவில்களில் இது போல் நைவேத்யம், அபிஷேக பொருட்கள், பூ மாலைகள் என்று எல்லாமே ஆகம பரம்பரை விதிகளுக்கு ஏற்ப நிர்வாகம் கொடுப்பதில்லை. தவிர அர்ச்சகருக்கு பக்தர்கள் கொடுக்கும் சம்பாவனையையும் பக்கத்திலேயே கருவறைக்கு அருகில் கண்காணிக்கும் employee ஊழியர் பிடுக்கிவிடுகிறார். நீங்கள் நின்று கவனிக்கவும்.அர்ச்சகர்கள் சொன்னது" ஏதாவது கேட்டால், நீ கத்தினாய் என்று சொல்லி பணி நீக்கம் செய்வர்" என்று வருத்தத்துடன் கூறினார்.ஒரு உரிலும் எதுவும் ஆகம விதிப்படி நைவேத்யம், திருநாள், புறப்பாடுகள் நடப்பது இல்லை. அர்ச்சகர்கள் பரம்பரை தொடருமா...?? தொடர்ந்தாலும் நல்ல விற்பன்னர்கள் இந்த சூழ்நிலையில் பரம்பரை தொழிலுக்கு வருவார்களா...????(வெளிநாடுகளில் நல்ல வேத விற்பன்ன அர்ச்சகர்கள் கோவில்களை நிர்வாக்கிறார்கள்)ஈவேரா நாயக்கர் கனவு சீக்கிரம் நிறைவேறிவிடுமா....????காலம் தான் பதில்!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X