சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூரில் பா.ஜ., நிர்வாகி படுகொலை: உறவினர்கள் சாலை மறியல்

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஓசூர்: கெலமங்கலம் அருகே, பா.ஜ., நிர்வாகி, நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கநாதன், 35; தனியார் பள்ளி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் கெலமங்கலம் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின், பா.ஜ.,வில் தன்னை இணைத்து கொண்ட அவருக்கு, கெலமங்கலம் ஒன்றிய, பா.ஜ., இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. போத்தசந்திரத்தை சேர்ந்த சிலருக்கும், ரங்கநாதனுக்கும் இடையே, கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கெலமங்கலம் மேல் தெருவை சேர்ந்தவர்களுக்கும், போத்தசந்திரத்தை சேர்ந்தவர்களுக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த ரங்கநாதன், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார். அதன் பின், நேற்று மாலை தன் இரண்டாவது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய ரங்கநாதன், இரவு, 9:15 மணிக்கு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் மற்றும் காரில் வந்த மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என, ரங்கநாதனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், கெலமங்கலம் சாலையில்,நேற்று இரவில் மறியலில் ஈடுபட்டனர். கெலமங்கலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X