சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே வேலைக்கு போலி நியமன உத்தரவு: ரூ.2.50 லட்சம் சுருட்டியவருக்கு வலை

Added : செப் 16, 2020
Share
Advertisement

சேலம்: ரயில்வே வேலைக்கு போலி நியமன உத்தரவு வழங்கி, 2.50 லட்சம் ரூபாய் சுருட்டியதாக புகார் அளிக்கப்பட்டதால், போலீசார் விசாரிக்கின்றனர்.


சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த, அண்ணாதுரை மகன் காளிதாஸ், 23. இவர், நேற்று முன்தினம், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு: பி.எஸ்சி., பயோ டெக்னாலஜி முடித்துவிட்டு, வேலை தேடி வருகிறேன். என்னை, மர்ம நபர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ரயில்வேயில் வேலை உள்ளதாக தெரிவித்தார். அதை நம்பி, என் சுய முகவரி, கல்வி சான்றிதழ் நகல்களை அனுப்பினேன். தொடர்ந்து, மும்பை ரயில்வே, வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிய, பயிற்சி கட்டணமாக, 20 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த அறிவுறுத்தி, அதன் கணக்கு எண்ணை தெரிவித்தனர். நம்பி பணம் செலுத்திய நிலையில், பணி நியமன ஆணை வழங்கினர். பின், பல்வேறு கட்டண பெயரில், 2.50 லட்சம் ரூபாய் வரை பெற்றனர். ஆனால், பணி நியமன ஆணையை ரயில்வே அதிகாரிகளிடம் காட்டியபோது, போலி என தெரிந்தது. இதனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதுகுறித்து, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று விசாரணை மேற்கொண்டனர். காளிதாஸ் மட்டுமின்றி, சேலம் மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களிடம், இதுபோன்ற மோசடி நடந்திருப்பதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், பணம் சுருட்டியவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X