பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா

Added : செப் 16, 2020
Share
Advertisement

நாமக்கல்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 112வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில், தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

* நாமக்கல் காவேரி நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் தலைமை வகித்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாதுரையின் உருவப்படத்திற்கு, தி.மு.க.,வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


*குமாரபாளையத்தில், அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். அண்ணாதுரையின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நகர்மன்ற முன்னாள் தலைவர் தனசேகரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தி.மு.க., சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணா துரையின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகன்னாதன் தலைமையிலும், ம.தி.மு.க., சார்பில் நகர செயலர் விஸ்வநாதன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது. அதேபோல், மாவட்டம் முழுவதும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X