பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் கிடைத்த பொருள் போலீசார் மூலம் ஒப்படைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கரியாம்பட்டி, ஊனந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகள் சத்யா, 23. இவர் காக்காவேரி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பணி முடிந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தன் பர்சை தொலைத்துவிட்டார். அதில், பணம், ஏ.டி.எம்., கார்டு ஆகியவை இருந்தன. தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த விஷாலினியிடம் பர்ஸ் கிடைத்தது. இதையடுத்து, நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அதில் இருந்த முகவரி மூலம், எஸ்.ஐ., திலகவதி, சத்யாவை தொடர்பு கொண்டார். சத்யா நேரில் வந்து பர்சை பெற்றுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X