பொது செய்தி

தமிழ்நாடு

'ஓட்டுகளுக்காக நீட் எதிர்ப்பு'

Added : செப் 16, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ஓட்டுக்காக அரசியல்வாதிகள், 'நீட்' தேர்வை எதிர்ப்பதாக முன்னாள் எம்.பி., ராமலிங்கம் குற்றம் சாட்டினார். அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, ராசிபுரத்தில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தபின் முன்னாள் எம்.பி.,யும், இயற்கை நீர்வளபாதுகாப்பு இயக்க தலைவருமான ராமலிங்கம் கூறியதாவது: சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும் அரசியல் பொறுப்புக்கு வரமாட்டார். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் ஓட்டு விழாது என கூறமுடியாது. ரஜினி ஒன்றும் வடிவேலு இல்லை. ஓட்டுகள் பெறுவதற்காத்தான் அரசியல் கட்சிகள், 'நீட்' தேர்வை எதிர்க்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X