பொது செய்தி

தமிழ்நாடு

பி.எம்., கிசான் திட்ட முறைகேடு: 1,090 பேரிடம் ரூ.43.06 லட்சம் வசூல்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாமக்கல்: ''பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தில், 1,090 பேரிடம் இருந்து, 43.06 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர் மெகராஜ் கூறினார்.


பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இந்த திட்டத்தில், 84 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்தில் முதல்கட்டமாக, 13 மாவட்டங்களில், மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்திலும், 1,911 பேர், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து, பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கலெக்டர் மெகராஜ் கூறியதாவது: இத்திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், 1,911 பேர் போலி ஆவணம் மூலம் முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து, பணம் வசூல் செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை, 1,090 பேரிம் இருந்து, 43.06 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களிடம் இருந்து, ஒரு வாரத்துக்குள், பணத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-செப்-202015:04:17 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தவறு செய்தவர்கள் மேல் என் கிரிமினல் வழக்கு பூட்டு கைது செய்யக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X