உதவியாளர் பணி: நாளை கலந்தாய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவியாளர் பணி: நாளை கலந்தாய்வு

Added : செப் 16, 2020
Share

நாமக்கல்: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையக்குழு தொகுதி-4 தேர்வு, 2018-19 மற்றும் 2019-2020ம் ஆண்டுகளில், தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உளள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, ஒதுக்கீடு பெற்ற பணி நாடுனர்களுக்கான பணி நியமனம் வழங்கும் கலந்தாய்வு, நாளை (செப்., 17) துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த கலந்தாய்வு, மோகனூர் சாலை, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, முதன்மை கல்வி அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. நாமக்கல் மாவட்ட முகவரி அளித்துள்ள பணி நாடுனர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வரும் போது, தொகுதி- 4 தேர்வு 2018-19, 2019-20 மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடிதம், அனைத்து சான்று அசல், நகல் கொண்டு வரவேண்டும். இவ்வாறு, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X