பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறல்: 129 வழக்கு பதிவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த, எஸ்.பி., சக்திகணேசன், தீவிர நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி, முக கவசம் அணியாதவர்கள், பொது இடத்தில் எச்சில் துப்புபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், வணிக நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும், நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறையினருடன் இணைந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் ப.வேலூர் உட்கோட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்பிய, 23 பேர், முக கவசம் அணியாத, 105 பேர் மீதும், வணிக நிறுவனம் ஒன்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 33 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 'நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டுவர, அனைத்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, எஸ்.பி., சக்திகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X